விமானி கடைசியாக பேசிய வார்த்தை ‘‘ குட்நைட் மலேசியன் 370 ’’: மலேசியா அறிவிப்பு

Written by vinni   // April 1, 2014   //

missing_plane_049மாயமான மலேசிய விமானத்தின் விமானி கடைசியாக பேசிய வார்த்தையில் திடீர் திருத்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் அதிகாலை நடுவானில் மாயமானது.

இன்று 24 வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிரது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

இந்நிலையில் இந்திய பெருங்கடலில் மிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது.

எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற கூறபட்டது ஆனால் அது மீன் பிடி சாதனங்கள் என்று தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் மாயாமான மலேசிய விமானத்தில் இருந்து துணை விமானி கடைசியாக, ’ஆல் ரைட் குட்நைட்’ என்று பேசியதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால், அந்த விமானத்தில் இருந்து கடைசியாக ‘‘ குட்நைட் மலேசியன் 370 ’’ என்ற வாசகம் கேட்டதாகவும் இதை யார் பேசியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மலேசியா நேற்று அறிவித்தது.

இதற்கிடையே, அந்த விமானத்தில் சென்றவர்களின் உறவினர்கள், மலேசியா அரசு இன்னும் சரியான தகவல்களை தராமல் மறைக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.

விமானம் மாயமானதில் இருந்து மலேசிய அதிகாரிகள் முரண்பாடான தகவல்களை அளிப்பதாக விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Similar posts

Comments are closed.