ஜேர்மனியில் அமேசான் வர்த்தக நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Written by vinni   // April 1, 2014   //

அமெரிக்காவின் சியாட்டிலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனைக்குப் பெயர் பெற்றது ஆகும்.

ஜெர்மனியில் உள்ள இதன் ஒன்பது முக்கிய தளங்களில் ஒன்று லெய்ப்சிக் நகரில் செயல்பட்டுவரும் லாஜிஸ்டிக்ஸ் மையமாகும். இங்கு பணிபுரியும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களில் 700 பேர் வெர்டி எனப்படும் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர்.

amazon_strikes_001இங்கு சமீபகாலமாக தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு குறித்த போராட்டங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெர்மனியின் அனைத்து மையங்களிலும் பணிபுரியும் மொத்தம் 9000 தொழிலாளர்களுக்கும் அந்நாட்டின் விநியோகத் துறையை ஒத்த ஒரே அளவான சம்பள விகிதத்தைப் பெற்றுத்தர வெர்டி முயன்று வருகின்றது.

ஆனால் அங்கு லாஜிஸ்டிக்ஸ் துறைகளுக்கு குறைந்த அளவான சம்பளமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அதனைக் கணக்கீடாகக் கொண்டே ஊழியர்களின் சம்பளம் அளிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமேசான் நிறுவனம், வெர்டியின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

எனவே, லெய்ப்சிக் பிரிவு ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். அங்குள்ள 2000 ஊழியர்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை சரிவரத் தெரியவில்லை என்றபோதும் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது என்று வெர்டி அமைப்பின் தகவல் தொடர்பாளரான தாமஸ் ஸ்னேடர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.