ஜனாதிபதி மீது நம்பிக்கையிழந்த மக்கள்

Written by vinni   // April 1, 2014   //

francois_hollande_001பிரான்சில் சமீபத்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள் ஆளும் சோஷியலிஸ்ட் கட்சிக்குப் பெரிய பின்னடைவைத் தந்துள்ளன.

கருத்துக் கணிப்புகள் முன்னரே இந்த முடிவினைத் தெரிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்தே தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டு தேர்தலிலும் ஆதரவினை அளிப்பார்கள் என்று எண்ணியிருந்தார்.

ஆனால் தேர்தலின் முடிவுகளோ ஆளும் கட்சி 155க்கும் மேற்பட்ட நகரங்களில் தங்களுடைய செல்வாக்கை இழந்துள்ளதைத் தெரிவிக்கின்றது. இதற்கு பதிலாக மரைன் லெ பென்னின் தேசிய முன்னணிக் கட்சி 15 இடங்களில் வெற்றியை நெருங்குவதாக நேற்றைய தகவல்கள் தெரிவித்தன.

தெற்குப் பகுதி நகரங்களான பெசியர்ஸ், பிரிஜூஸ் மற்றும் பாரிசின் வடகிழக்கில் உள்ள வில்லேர்ஸ் கோட்டேரெட்ஸ் போன்ற பகுதிகளிலும் இந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக காணப்பட்டன. இதுமட்டுமின்றி இந்த நாட்டின் ஏழாவது மாவட்டமும், இரண்டாவது பெரிய நகரமுமான மார்செயிலை இந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது. 1,50,000 மக்களை கொண்ட இந்தத் தொகுதியின் வெற்றி அந்தக் கட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகின்றது.

மற்றொரு எதிர்க்கட்சியான மைய வலதுசாரி யுஎம்பி துலூஸ், குவிம்பர், லிமோக்ஸ், செயின்ட் எடின், ரீம்ஸ், ரொபைக்ஸ், டர்காயிங் போன்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. தலைநகர் பாரிஸ் ஆளும் கட்சி வசமே உள்ளது. இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆன்னி ஹிடால்கோ இந்நகரத்தின் முதல் பெண் மேயர் என்ற பெருமையுடன் பதவி ஏற்கின்றார்.

நகராட்சித் தேர்தல்களின் இந்த முடிவுகள் ஆளும்கட்சி அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் ஜீன் மார்க் ஐரால்ட்டின் பதவி பறிக்கப்பட்டாலும், தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ள ஹோலன்டே விரும்பாத நிலையில் இன்று உள்துறை அமைச்சரையும் அதன்பின்னர் பிரதமரையும் சந்திக்கும் ஜனாதிபதி, இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து அறிவிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.