சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என பிரித்தானியா நம்பிக்கை

Written by vinni   // April 1, 2014   //

britonசர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. தீர்மானம் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்யும் நோக்கில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்தும் பிரித்தானியா நடவடிக்கை எடுக்கும் என அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் சுயாதீன கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்மானத்திற்கு முழு அளவில் இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கைக்கு மிக வலுவான செய்தி சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களினதும் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.