கொழும்பில் அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் பாதுகாப்பு கருத்தரக்கு

Written by vinni   // April 1, 2014   //

mpat-logo-150x150ஒருபுறம் இலங்கைக்கு எதிராக ஐநாதீர்மானம் – மறுபுறம் கொழும்பில் அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் பாதுகாப்பு கருத்தரக்கு

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தலைமையகம், இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு பிரதானி அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘டெம்பஸ்ட் எக்ஸ்பிரஸ் – 24′ எனும் சர்வதேச கருத்தரங்கு கொழும்பில் நடத்தப்படவுள்ளது.

நாளை 01.04.14 முதல் 9.04.14 வரை கொழும்பு, கலதாரி நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச கருத்தரங்கில் அமெரிக்கா உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த 46 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வியட்நாம், கெனடா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, நேபாளம், மாலைத்தீவு, கம்போடியா, இதோனேசியா, மலேசியா, மொங்கோலியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 26பேரும் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 20பேரும் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் முப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 23பேரும், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு உட்பட முக்கிய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 21பேரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை இடம்பெறவுள்ள கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வானது பாதுகாப்பு பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் ஏப்ரல் 9ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி நிகழ்வு கடற்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிசெல் ஜே. சிசன் பிரதம அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளார்.

ஆசிய – பசுபிக் வலயத்தில் ஏற்படும் திடீர் அனர்த்தங்கள் அல்லது திடீர் தேவைகளின் போது நாடுகளுக்கிடையில் ஏற்படவேண்டிய அந்நியோன்ய நடவடிக்கைகள் மற்றும் செயற்றிட்ட விருத்திகள் தொடர்பில் இந்த கருத்தரங்கின் போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.