தக்காளியில் என்னென்ன இருக்கிறது தெரியுமா?

Written by vinni   // March 31, 2014   //

tomato-நாம் பழங்களை சாப்பிடுவதைபோலவே தக்காளி பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளி பழத்தை அப்படியே சாப்பிடுவது டானிக் குடிப்பதற்கு சமமானது. அதுமட்டுமில்லாமல் தக்காளி பழத்தை எந்த வகையில் பக்குவபடுத்தி சாப்பிட்டாலும் அதன் சக்தி அப்படியே நமக்கு கிடைக்கும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது.

விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு.

தக்காளி இரசம்

நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு விட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.

சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு,குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேற் குறித்த நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும், நாக்கு வறட்சியும் அகலும், உடலும் மினுமினுப்பாய் மாறும்.

உடல் பருமன் குறையும்

100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20தான். எனவே,எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.

பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், விட்ட‌மின் ‘சி’, விட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.

உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலை உணவாக‌ பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும்.

இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமைனக் குறைக்கலாம்.

தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.

தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

பார்வை நன்கு தெரிய

இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.

செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.


Similar posts

Comments are closed.