யுவராஜின் ஆட்டத்தால் மிரண்ட டோனி

Written by vinni   // March 31, 2014   //

australia_vs_india_28_00320 ஓவர் உலக க்கிண்ண கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் அபாரமாக இருந்தது என்று அணித்தலைவர் டோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

20 ஓவர் உலகக்கிண்ண போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது, இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது ஆட்டத்தில் மேற்கிந்திய அணியையும், 3வது ஆட்டத்தில் வங்கதேசத்தையும் தோற்கடித்தது.

கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்திய அணி நேற்று அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய அவுஸ்திரேலியா 16.2 ஓவரில் 86 ஓட்டங்களுடன் சுருண்டது. இதனால் இந்தியா 73 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறியதாவது, யுவராஜ்சிங்கின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் அவர் சிறந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தன் விருப்பதற்கு ஏற்ற வகையில் அவர் ஆடினார் என்றும் இந்த வெற்றி எனக்கு திருப்தி அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

 


Similar posts

Comments are closed.