பிரிட்டனில் ஆரம்பமாகும் ”பகலொளி சேமிப்பு”

Written by vinni   // March 31, 2014   //

india_time_002இங்கிலாந்தில் கோடைக்காலம் வருவதால் பிரிட்டிஷ் கடிகாரங்களில் ஒரு மணி நேரம் முன்னோகி வைக்கும் வழக்கம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கோடை நேரம் என்று குறிப்பிடப்படும் கடிகாரங்களை ஒரு மணி நேரம் முன்னோக்கி வைக்கும் வழக்கம் உள்ளது.

வரும் அக்டோபர் வரை கடைபிடிக்கப்படும் இவ்வழக்கத்திற்கு பகலொளி சேமிப்பு நேரம் என்ற மற்றொரு பெயரும் உள்ளது.

இந்த வழக்கம் வருவதற்கான காரணத்தை ஆராய்கையில்,கடந்த 1907ம் ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த வில்லியம் வில்லேட் என்ற குதிரை சவாரியாளர் அதிகாலை நேரங்களில் அங்குள்ள காடுகளின் வழியே நீண்ட சவாரிகளை மேற்கொள்ளுவார்.

இவர் பெரும்பான்மையான மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரங்களில் பயணிப்பதால் பகல் வெளிச்சம் வீணாவதைத் தடுக்கும் முறையில் இத்தகைய நேர மாற்றத்தை அந்த காலகட்டத்திலேயே அறிமுகப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்த ஒரு மணி நேர கூடுதல் சூரிய வெளிச்சத்தினால் நிறைய சுகாதார நலன்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

குறிப்பாக பருவகால பாதிப்பினால் ஏற்படக்கூடிய மனச்சோர்வு நீங்குவது மட்டுமல்லாமல் நேர அதிகரிப்பினால் ஒருவரது ஆற்றல்கள் சேமிக்கப்படுவதாகவும், போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றங்கள் போன்றவை குறைவதாகவும் இந்த நேர மாற்றத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்களுக்கு இந்த நேர மாற்றத்தினை நினைவுக்கூறும் வகையில் ‘ஸ்ப்ரிங் ஃபார்வேர்ட், ஃபால் பேக்வர்ட்’ என்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


Similar posts

Comments are closed.