மலேசிய விமானத்தை நிரூபிக்கும் ஆதாரங்கள்:அவுஸ்திரேலிய பிரதமர்

Written by vinni   // March 31, 2014   //

Malaysian-planeஇந்திய பெருங்கடலில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் மலேசிய விமானத்தின் பாகங்கள் தான் என்று அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.

மாயமான மலேசிய விமானம் தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து பார்க்கையில் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் தான் எங்காவது காணாமல் போயிருக்க வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு பெருங்கடலில் விமானத்தை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை தேடும் பணியில் உதவி புரிகின்றனர் எனவும் அறிவித்துள்ளார்.

எனினும் இவ்விடயம் மிக எளிதானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்


Similar posts

Comments are closed.