ஒபாமாவை குரங்காக சித்தரித்த பத்திரிகை!

Written by vinni   // March 31, 2014   //

obama_monkey_002பெல்ஜியம் பத்திரிகையில் ஒபாமாவை மனித குரங்கு ஆக சித்தரித்து கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரது மனைவி மிச்செலி ஆகியோரின் முகத்தை மனித குரங்குபோன்று வரைந்து பிரசுரித்தது.

அமெரிக்காவில் மரிஞ்சுனா என்ற போதை பொருள் விற்க ஒபாமா அனுமதி வழங்கியுள்ளார். அதை கேலி செய்யும் விதமாக இந்த கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.

மேலும் இதை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஒபாமாவுக்கு அனுப்பியதாக கேலி (ஜோக்) எழுதப்பட்டிருந்தது. இது வாசகர்கள் மனதை புண்படுத்தியதால், டுவிட்டர் இணையதளத்தில் ஏராளமானவர்கள் அந்த பத்திரிகை மீது கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது ஒபாமா மீது இன வெறியை தூண்டுவதாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே அதிபர் ஒபாமா ஏப்ரல் 1ம் திகதி பெல்ஜியம் வர இருக்கிறார். இந்நிலையில் இக்கார்ட்டூன் பெல்ஜியம் அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பத்திரிகை நிறுவனம் கூறுகையில், தங்களது இந்த கார்ட்டூன் இன வெறியை துண்டுவதற்காக வெளியிடப்படவில்லை என்றும் கேலி செய்யும் விதத்தில் தான் இக்கார்ட்டூன் வரையப்பட்டது எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.


Similar posts

Comments are closed.