மனித உரிமை செயற்பாட்டாளர்கள் – சாட்சியாளர்களை பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்

Written by vinni   // March 31, 2014   //

Geneva-flagமனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர். குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோரை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச பொறிமுறைமையை உருவாக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருவதாக புலம்பெயர் தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, வட அமெரிக்க தமிழ்;ச்சங்கம், இலங்கை தமிழ் சங்கம், நாடு கடந்த தமிழீழ இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் தமி;ழ் அரசியல் செயற்பாட்டு பேரவை, உலகத் தமிழ் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இதனைத் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்காமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், யுத்தம் காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளன.
வடக்கில் இராணுவ பிரசன்னம், காணி அபகரிப்பு, சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பில் தீர்மானத்தில் உரிய முனைப்பு காட்டப்படவில்லை என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


Similar posts

Comments are closed.