பொன் சேகாவின் வாக்கு செல்லுபடியானது

Written by vinni   // March 31, 2014   //

Retired General Sarath Fonseka, listens to a speech introducing him before speaking to labor unions from the Marxist backed opposition party in Colomboசிறைச்சாலை அதிகாரிகள் சிறைச்சாலை அதிகாரிகள்முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக்கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவின் வாக்கு செல்லுபடியானது  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இரண்டு வருடங்களுக்கு குறையாத காலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண தேர்தலின் போது அவர் வாக்களிப்பதற்கு தகுதியல்லாதவர் இல்லை.

அவ்வாறான சிறைத்தண்டனையொன்றை அனுபவிக்கும் ஒருவருக்கு, ஜனாதிபதி தேர்தல்,நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மட்டுமே வாக்களிக்க முடியாது என்று அரசியலமைப்பின் 88 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.