விண்வெளி வீரர்கள் எந்த ஆடையை அணியலாம்?

Written by vinni   // March 30, 2014   //

spaceவிண்வெளி வீரர்களுக்கான புதிய வடிவில் உடை தயாரிப்பது குறித்து பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

விண்வெளியில் பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு அழகிய வடிவில் தரமான உடைகள் தயாரித்து வழங்கப்பட்டு வருகின்றன.

இனி வருங்காலத்தில் அந்த உடை வடிவமைப்பை மாற்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ‘நாசா’ முடிவு செய்துள்ளது.

அதற்காக புதிய ஆடைகளை வடிவமைத்து புகைப்படங்களை வெளியிட்டதுடன் எந்தவிதமான உடையை விண்வெளி வீரர்களுக்கு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தொழில்நுட்பம், அதிநவீன நாகரீகம் மற்ற உயிரினங்கள் போன்ற தோற்றம் கொண்ட ஆடைகள் என 3 விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.