பெண் போராளியை கவுரவித்த ஒபாமா

Written by vinni   // March 30, 2014   //

obama_honours_002அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சவூதி பெண்ணுரிமை போராளிக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

சவுதி தலைநகர் ரியாத்திற்கு நேற்றுஒரு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட ஒபாமா சவூதி மன்னர் அப்துல்லா பின், அப்துல் அஜீஸ் அல் சவூத்தை சந்தித்து பேசியுள்ளார்.

இதனையடுத்து நேற்றிரவு அங்கு ஓய்வெடுத்த ஒபாமா ஆண் ஆதிக்கத்திற்கு எதிராக போராடிவரும் பெண்ணியக்கவாதி குழுவினரை சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டிலிருந்து சவூதி பெண்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் பெண்ணுரிமை போராளியான மஹா அல்-முனீஃப், இந்த ஆண்டுக்கான அமெரிக்க அரசின் பெண்ணுரிமை போராளி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த சந்திப்பின்போது அந்த விருதினை ஒபாமா மஹாவுக்கு வழங்கியதுடன், அவரது தொண்டு மென்மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.


Similar posts

Comments are closed.