உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை இல்லை: ரஷ்யா

Written by vinni   // March 30, 2014   //

ukraine_troops_003உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தின் மீது புதிதாக ராணுவ நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனிடம் உறுதியளித்துள்ளார்.

“இந்தப் பிரச்னைக்கு ராஜீய ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். அங்கு நிலவும் பதற்றத்தால் சிறிதாக பற்ற வைக்கப்படும் தீப்பொறி பெரும் தீப்பிழம்பாக மாறி எதிர்பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று தொலைபேசி மூலம் பான் கீ மூன் எச்சரித்தார். இதன்போது புதின் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

முன்னதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், “உக்ரைனால் தொடங்கப்பட்ட பிரச்னை, தற்போது அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பிரச்னை தொடங்கிய போதே, ஐ.நா.வின் அடிப்படை நெறிமுறைகளின்படி பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியாக தீர்வு காண வேண்டும்” என்று தாம் வலியுறுத்தியதை புதினிடம் பான் கீ மூன் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்ய தலைவர்கள் கடும் நடவடிக்கைகளைத் தவிர்த்து பதற்றத்தை தணிக்கும் வகையில் உடனடியாக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Similar posts

Comments are closed.