ஜெயிலில் களைகட்டும் ருசியான உணவு

Written by vinni   // March 30, 2014   //

halal_food_002பிரான்ஸ் நாட்டு சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு, “ஹலால்” உணவு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்சில் சிறை கைதிகளுக்கு சைவு உணவு அல்லது பன்றி இரைச்சியுடன் கூடிய உணவு வழங்கப்படுகிறது.

ஆனால் பன்றி இரைச்சியை உண்ணுவது தங்கள் மதத்திற்கு எதிரானது என்ற காரணத்தால் இஸ்லாமிய கைதிகள் அதனை மறுத்து வந்தனர்.

மேலும் தங்களது பாரம்பரிய உணவான ஹாலால் உணவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இவர்களுக்கு உணவு செய்ய வேண்டும் எனில் தனி சமையல்காரர்களை நியமிக்க வேண்டியிருக்கும் என்பதால் இக்கோரிக்கைக்கு சிறை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து இஸ்லாமிய கைதிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து வெளியிலிருந்து, ஹலால் உணவை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டதால், இஸ்லாமிய கைதிகளுக்கு ஹலால் உணவு வழங்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.