இங்கிலாந்தில் முதலாவது ஓரினத் திருமணம்

Written by vinni   // March 30, 2014   //

உலகமெங்கிலும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 15 உலக நாடுகள் இவ்வகையான திருமணத்திற்கு சட்டரீதியான அனுமதி அளித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் நேற்று ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் திருமணம் நடைபெற்றது.

gay_couple_00152 வயதான ஜான் காபே என்ற ஆணும் 48 வயதான பெர்ணான்டோ மார்டி என்ற ஆணும் நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதேபோல் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் நில் ஆல்ராடு என்பவரும் ஆண்ட்ரூ என்பவரும் விருந்தினர்கள் 100 பேர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் பல ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களும் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தனது வலைத்தளத்தில் “திருமணம் செய்து கொண்ட ஒரு பாலினத்தவர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலம் அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் சட்டமாக்கப்பட்டாலும் இங்கிலாந்து திருச்சபை ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே அங்கு வைத்து திருமணம் நடத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.