பரபரப்பான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

Written by vinni   // March 30, 2014   //

england_vs_southafrica_26_005இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அணிக்கு தலைமை ஏற்ற டி வில்லியர்ஸ் 28 பந்துகளில் 69 ரன்கள் விளாசி உதவ, பர்னல் மற்றும் இம்ரான் தஹிர் விக்கெட் வேட்டை நடத்தி தென் ஆப்பிரிக்காவின் வெற்றியில் பெரும்பங்கு வகித்தனர்.

சிட்டகாங்கில் நேற்று இந்த ஆட்டம் நடைபெற்றது. தாமதப் பந்து வீச்சு காரணமாக ஒரு ஆட்டத்தில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளஸ்ஸிஸýக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், அவருக்குப் பதிலாக டி வில்லியர்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பேற்றார்.

தலைவனுக்கே உரிய பொறுப்புடன் ஆடிய அவர் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் பறக்க விட்டார். தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா தன் பங்குக்கு 56 ரன்கள் விளாசினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து உதவிய அலெக்ஸ் ஹேல்ஸ் 22 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 34 ரன்கள் அடித்தார்.

கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை. அந்த ஓவரை ஸ்டெயின் வீசினார். 18 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்த ரவி போபராவை முதல் பந்திலேயே பெவிலியன் அனுப்பி வைத்தார் ஸ்டெயின். ஆனால், அடுத்த பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார் பிரஸ்னன். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Similar posts

Comments are closed.