அமெரிக்க பிரேரணை திருத்தத்திற்கு இந்தியா, இலங்கைக்கு இரண்டு தடவைகள் ஆதரவாக வாக்களித்தது!

Written by vinni   // March 30, 2014   //

srilanka flgஇந்தியா, இலங்கை மீது வெளிப்படுத்தியுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதி மகிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரேரணை வாக்களிப்புக்கு வருவதற்கு முன்னர் இரண்டு வாக்களிப்புகள் இடம்பெற்றிருந்தன.

குறித்த பிரேரணையை ஒத்தி வைப்பதற்கும், அந்த பிரேரணையில் உள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் 10ம் சரத்தை நீக்குவதற்குமாக இந்த இரண்டு யோசனைகளை பாகிஸ்தான் கொண்டு வந்தது.

இந்த இரண்டு யோசனைகளுக்கும் இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து இலங்கை மீது இந்தியா கொண்டுள்ள நல்லெண்ணம் வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.


Similar posts

Comments are closed.