அணித்தலைவர் பதவியே வேண்டாம்! டோனி

Written by vinni   // March 29, 2014   //

dhoni_003ஐபிஎல் பிரச்சனைகளால் சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக டோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் சர்ச்சைகள் மற்றும் சூதாட்ட விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் தலைவிரித்தாடும் இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் அணித்தலைவர் பதவியில் இருந்து விலக தயாரக இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் பொறுப்பு ஆகிய பதவிகளில் இருந்து தான் பதவி விலக விரும்புவதாக அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனிடம் நேற்று தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Similar posts

Comments are closed.