யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்

Written by vinni   // March 29, 2014   //

warcrime-pictureயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின், விசாரணைகளை நடாத்தும் முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அரசாங்கம் ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது இந்தியா நடந்து கொண்ட விதம் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் இந்த நடவடிக்கையினால் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.75 மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வரும் நிலையில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.