20 கோடி ரூபா வரி செலுத்தி டோனி சாதனை!

Written by vinni   // March 29, 2014   //

dhoni_001இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி இந்த ஆண்டுக்கான (2013-2014) வருமான வரியாக 20 கோடி ரூபாவை செலுத்தியுள்ளார்.

பீகார் மற்றும் ஜார்கண்ட மண்டலத்தில் அதிக வருமான வரி கட்டிய தனிநபர்களில் ஜார்கண்டை சேர்ந்த டோனி தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.

கடந்த ஆண்டில் வருமான வரியாக 22 கோடி ரூபாவை டோனி செலுத்தி இருந்தார். அதனை விட அவர் இந்த ஆண்டு குறைவான தொகை வருமான வரி கட்டி இருப்பதன் மூலம் அவரது வருமான விகிதம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை வருமானவரி முதன்மை தலைமை கமிஷனர் ஆர்.கே.ராய் ஊடகங்களுக்கு நேற்று அறிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.