விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்த ரஷ்ய விண்வெளி ஓடம்

Written by vinni   // March 29, 2014   //

  • russian_spacecraft_002விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மூன்று பேருடன் பயணம் செய்த ரஷ்ய விண்வெளி ஓடம், அந்த மையத்தின் அருகே நேற்று நிலை நிறுத்தப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனை அடைய இரண்டுடு நாள் தாமதம் ஏற்பட்டது.

இது குறித்து ரஷ்ய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் தகவல் தருகையில்,

கஜகஸ்தான் சர்வதேச ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் ஸ்கோர்ட்சோவ், ஓலெக் ஆர்டெம்யேவ் மற்றும் “நாசா’வின் ஸ்டீவ் ஸ்வான்சன் ஆகியோருடன் “சோயுஸ் டி.எம்.ஏ.-12எம்’ என்ற ராக்கெட் புதன்கிழமை புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட 6 மணி நேரத்தில் விண்கலத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டு நீள்வட்டப்பாதையை அடைவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதையடுத்து ரஷ்ய விண்வெளி மைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொழில்நுட்பக் கோளாறை விஞ்ஞானிகள் சரி செய்தனர்.

அதையடுத்து நேற்று அதிகாலை 3.53 மணிக்கு விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சரியான இலக்கினை அந்த விண்கலம் அடைந்தது என்று ரஷ்ய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றுள்ள 3 பேரும் அடுத்த ஐந்தரை மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து ஆராய்ச்சிப்பணியை மேற்கொள்வர்.

ஏற்கெனவே அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஜப்பானின் கொய்ச்சி வகாட்டா, அமெரிக்காவின் ரிக் மாஸ்ட்ராச்சியோ, ரஷ்யாவின் மிகாயில் துயுரின் ஆகியோர் மே மாதம் பூமிக்கு திரும்புவர்.


Similar posts

Comments are closed.