தேன்நிலவு முடித்த கையோடு கணவனை எமலோகம் அனுப்பிய மனைவி

Written by vinni   // March 28, 2014   //

wife_killed_husband_002அமெரிக்காவில் தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கொலை செய்த மனைவிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிச்சூரியா பகுதியில் வசித்த கோலி ஜான்சன் (25), என்பவருக்கும் கிரகாம் (22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதிகள் தங்களது தேன்நிலவை கொண்டாட மலைப்பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதால் ஜான்சனை அவரது மனைவி கிரகாம் மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

திருமணமாகிய 8 நாளில் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இளம்பெண் கிரகாமுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் தண்டனை காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகள் அவரை கண்காணிக்க வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.