இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்கவும்: ஜனாதிபதி

Written by vinni   // March 28, 2014   //

president-mahinda-rajapaksa-newsfirstகடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட காரணத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு, இந்தியா நேற்று ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் வாக்காளிக்காமல் விட்டமைக்கு நன்றிக்கடனாகவே கருதப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Similar posts

Comments are closed.