உலகெங்கும் அறிமுகமாகின்றது LG G2 Mini

Written by vinni   // March 28, 2014   //

lg_g2_mini_002LG நிறுவனத்தின் G2 Mini ஸ்மார்ட் கைப்பேசியானது எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் உலகெங்கும் விற்பனைக்கு வரவுள்ளது.

4.7 அங்குல அளவு, 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இதில் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1.3 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரட்டை சிம் வசதி, தனியான சிம் வசதி என இருவகை பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.