வெற்றிக்கனியை தவறவிட்ட ஆனந்த்: 12வது சுற்றும் டிரா

Written by vinni   // March 28, 2014   //

viswanathan_anand_002கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் ஆனந்த் விளையாடிய 12வது சுற்று போட்டியும் டிராவில் முடிந்தது.
ரஷ்யாவில் உள்ள கான்டி மான்சிய்ஸ்க் நகரில் நடந்து வரும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் ஆகியோர் உள்ளிட்ட உலகின் 8 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வெள்ளை நிற காய்களுடன் ரஷ்ய வீரர் டிமிட்ரியை சந்தித்த ஆனந்த் 14 சுற்றுகள் கொண்ட இத்தொடரின் 12வது சுற்றிலும் டிரா செய்தார்.

34வது நகர்த்தலில், தனது யானையை வைத்து டிமிட்ரியின் மந்திரியை காலி செய்ய, ஆனந்துக்கு ஒரு மந்திரி கூடுதலாக இருந்தது. இந்நிலையில் ஆனந்த் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தனது ராஜாவை தொடர்ந்து மூன்று முறை ஒரே மாதிரியாக நகர்த்த, 41வது நகர்த்தலின் போது ஆட்டம் டிரா ஆனது.

இன்று நடக்கும் 13வது சுற்றில், ஆனந்த் ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினை எதிர்கொள்ளவுள்ளார்.

12 சுற்றின் முடிவின் புள்ளிகள் விவரம்

1.ஆனந்த் – 7.5 – முதல் இடம்

2. லெவான் ஆரோனியன் – 6.5 –இரண்டாவது இடம்

3. ஷாக்ரியார் – 6 – மூன்றாம் இடம்

4. செர்ஜி கர்ஜாக் – 6 – நான்காவது இடம்


Similar posts

Comments are closed.