ஹேல்ஸ் அதிரடி சதம்: இங்கிலாந்து அபார வெற்றி

Written by vinni   // March 28, 2014   //

england_vs_srilanka_22_001உலக கிண்ண 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில் இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் 6 விக்கெட்களினால் தோல்வியை சந்தித்து.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் மஹேல ஜெயவர்த்தன 89 ஓட்டங்களையும், திலகரட்ன டில்ஷான் 55 ஓட்டங்களையும், திசர பெரேரா 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேட் டேன்பக், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுபாடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ஓட்டங்களைப் பெற்றார். ஒய்ன் மோர்கன் 57 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக நுவான் குலசேகர 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2 புள்ளிகளைப் பெற்று குழு 1 இல் நான்காமிடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை அணி 4 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது.

இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு மேல் பெற்று தோல்வியடைந்தது இதுவே முதற் தடவை ஆகும்.

இங்கிலாந்து அணி சார்பாக சர்வதேச 20-20 போட்டியில் பெறப்பட்ட முதல் சதம் இது. இதேவேளை இலங்கை அணிக்கு எதிராக பெறப்பட்ட முதல் சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.