பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓவியம்

Written by vinni   // March 28, 2014   //

woman_rescue_003அமெரிக்காவில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட பெண்ணின் உயிரை ஓவியம் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள ஓசோ என்ற இடத்தில் கடும் மழை காரணமாக சில நாட்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்ததுடன், 90 பேரின் கதி என்ன ஆனது என்றே தெரியாத நிலை உள்ளது.

இந்நிலையில் மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர், வீட்டின் இடிபாடுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த ராபின் யங்பிளட்(வயது 63) என்ற பெண்ணை உயிருடன் மீட்டனர்.

‘சுவரில் தொங்கவிட்டிருந்த ஓவியப்படம் தான் தன் உயிரை காப்பாற்றியதாக மீட்புக் குழுவினரிடம் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் 4 நாட்களுக்கு பிறகு தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்தார்.

சிக்கியிருந்தவர்களை மீட்பதற்காக “தெர்மல் இமேஜிங்’ எனப்படும் உடல் வெப்பத்தைக் கொண்டு மனிதர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தும் தொழில்நுட்ம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.