கிரிமீயாவை இணைத்து கொண்டது சட்டவிரோதம்!

Written by vinni   // March 28, 2014   //

un_aganist_crimea_002கிரிமீயாவை ரஷ்யாவுடன் இணைத்து கொண்டது சட்டவிரோதம் என ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு தனிநாடான உக்ரைன் பெருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்தது.

இப்பிரச்சனையினால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்திய போதிலும் இதற்கு உடன்படாமல், ஜனாதிபதி யானுகோவிச் இருந்துள்ளார்.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் யானுகோவிச் தலைமறைவானார், இதனை தொடர்ந்து கிரிமீயா மக்கள் தங்கள் மாகாணத்தை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தனர்.

இதற்கான வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைய ஆதரவு தெரிவித்ததால், கடந்த 17ம் திகதி முதல் ரஷ்யாவுடன் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்தி கிரிமீயாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது சட்டவிரோதமானது என ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு 100 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, 11 நாடுகள் எதிராக வாக்களித்தன, இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் புறக்கணித்தன.

அந்த தீர்மானத்தில் உக்ரைனின் கிரிமீயாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு செல்லாது என்றும், கிரிமீயாவில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.