மலேசிய விமானத்தில் பயணித்தவர்களுக்கு இறுதி சடங்குகள்

Written by vinni   // March 28, 2014   //

missing_plane_040மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றது.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நகரை நோக்கி சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது.

இந்திய பெருங்கடலில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம், அதனால் அதில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விமானத்தில் பயணித்தவர்களுக்கான இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், டாவோயிஸ்ட், புத்த மதத்தினர் என பலதரப்பட்ட பயணிகள், இந்த விமானத்தில் பயணித்துள்ளதால் அவரவர் மத சம்பிரதாயப்படி இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

இறந்தவர்களின் உடல் கிடைத்தால் தான் சடங்குகளை செய்வோம் என முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.

மலேசிய பல மதங்களின் கவுன்சில் தலைவர் ஜாகிர் சிங் குறிப்பிடுகையில், விமானத்தில் பயணித்தவர்களுக்கு அரசு சார்பில் நினைவாஞ்சலி நடத்துவதற்கு முன், பயணிகளின் உறவினர்களது சம்மதத்தை பெறுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளானால், அது தொடர்பான முழு விவரங்களையும் கருப்பு பெட்டி மூலம் அறியலாம்.

விமானத்தின் வேகம், சென்ற திசை, விமானிகள் அறையில் நடந்த உரையாடல் உள்ளிட்ட 25 மணி நேர தகவல்கள் இந்த டேட்டா ரெக்கார்டரில் பதிவாகியிருக்கும்.

இப்பெட்டியில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் திறன், ஒரு மாதத்தில் காலாவதியாகி விடும்.

இதன் படி அடுத்த மாதம் 8ம் திகதிக்குள் பேட்டரி காலாவதியாகி விடும், மேலும் ஐந்து நாட்கள் வரை பேட்டரி உழைக்க வல்லது.

எனவே வரும் 12ம் திகதிக்குள் கருப்பு பெட்டி கிடைத்தால் தான், விபத்துக்குரிய தகவல்கள் தெரியவரும்.


Similar posts

Comments are closed.