சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க போவதில்லை – அரசாங்கம்

Written by vinni   // March 28, 2014   //

navaஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க போவதில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நடத்தும் எந்த விசாரணைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை பாதிப்படைய செய்யும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவின் யோசனை மூலம் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்படும் என்பது சமாதானம் பாதிக்கப்பட்டு, நாடு ஸ்திரமற்ற நிலைமைக்கு செல்லக் கூடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் உள்நாட்டு விசாரணைகளை நடத்தக் கூடிய தகுதியான நபர்கள் உள்ளனர். அரசாங்கம் இதன் ஊடாக நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும்.

ஜெனிவா யோசனையை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.