100வது டெஸ்டுக்காக காத்திருக்கும் கிறிஸ் கெய்ல்

Written by vinni   // March 24, 2014   //

chris_gayle_002மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், தனது 100வது டெஸ்டில் களமிறங்க காத்திருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஜூன் மாதம் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் இம்மைல்கல்லை எட்ட உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல்(வயது 34).

கடந்த 1999ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் காலடி வைத்தவர், 2000ம் ஆண்டு நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

இதுவரை இவர் 99 டெஸ்ட்(6933 ஓட்டங்கள்), 255 ஒருநாள்(8743 ஓட்டங்கள்), 38 சர்வதேச டுவென்டி–20(1130 ஓட்டங்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்நிலையில் கெய்ல் தனது 100வது டெஸ்டில் களமிறங்க உள்ளார் என மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது, முதல் டெஸ்ட் ஜமைக்காவில்(ஜூன் 8–12) நடக்கிறது.

இப்போட்டியின் மூலம் கெய்ல், தனது 100வது டெஸ்டில் விளையாட உள்ளார்.

தவிர இப்போட்டி, இவரது சொந்த ஊரான ஜமைக்காவில் நடக்க இருப்பதால் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார்.

இதன்மூலம் 100வது டெஸ்டில் விளையாடும் 59வது சர்வதேச வீரர் மற்றும் 9வது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் என்ற பெருமையும் பெற உள்ளார்.


Similar posts

Comments are closed.