அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை மிரட்டிய பாகிஸ்தான் வீரர்

Written by vinni   // March 24, 2014   //

australia_vs_pakistan_002உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில் அவுஸ்திரேலியா அணியை 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உமர் அக்மல் 94 ஓட்டங்களையும், கம்ரன் அக்மல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் நேதன் கொட்லர் நைல் 2 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

கிளன் மக்ஸ்வெல் 74 ஓட்டங்களையும், ஆர்ரோன் பிஞ்ச் 65 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக 118 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சுல்பிகார் பாபர், சஹிட் அட்ப்ரிடி, சைட் அஜ்மல், உமர் குல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக உமர் அக்மல் தெரிவு செய்யபட்டார். பாகிஸ்தான் அணி இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.


Similar posts

Comments are closed.