தமிழர்கள் மண்ணை இழந்தால் எல்லாவற்றையும் இழக்க நேரிடும்

Written by vinni   // March 24, 2014   //

ariyanenthiran_4தமிழர்களாகிய நாங்கள் எமது மண்ணை இழந்தால் எதிர்காலத்தில் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாக்கரைப் பகுதியில் அமைந்துள்ள பட்டிப்பளைப் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நேற்று கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது.

பிரதேச ஒன்றியத்தின் தலைவர் ஞா.துரையப்பா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசம் என்பது எமது சொத்தாகும். இதற்கு ஒரு தனித்துவ மண் வாசனை இருக்கின்றது. அதை கட்டிக்காக்க வேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது.

கறிப்பாக எமது படுவான்கரைக்கு பாலம் கிடைத்துள்ளமை ஒரு வரப்பிரசாதமாகும். ஆனாலும் எமக்கு உரித்தான கலாசாரம், வர்த்தகம், நிலம், போன்றவற்றை பேணி காக்க வேண்டியது கட்டாய தேவை.

போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்களை இழந்த ஒரே இனம் என்றால் அது தமிழ் இனம்தான். ஏறக்குறைய மூன்று இலட்சம் பேரை நாங்கள் விடுதலைப் போராட்டத்தில் இழந்து இருக்கின்றோம். போராட்டத்தில் இரண்டாவது இடமாக பல்லாயிரக்கணக்கானோரை இழந்த இனமாக சிங்கள இனம் உள்ளது.

நூற்றுக்கணக்கானோரை இழந்த இனமாக முஸ்லிம் சமூகத்தினர் காணப்படுகின்றனர். இதனை தரவுகள்மூலமாக என்னால் நிருபிக்க முடியும் என்றார்.


Similar posts

Comments are closed.