புலித்தலைவர்களை தேடி கிழக்கிலும் சுவரொட்டிகள்

Written by vinni   // March 24, 2014   //

east-notice-1புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபி எனப்படும் கசியன் மற்றும் நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இருவரும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இரு நபர்களின் புகைப்படங்களும் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிடப்பட்ட இரு நபர்களும் அதிகளவிலான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறிந்தவர்கள் 0766911617 அல்லது 0113135680 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அறியத் தாருங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கில் யுத்தம் நடைபெற்ற போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல கிராமங்களிலும் காடு மேடுகளிலும் இந்தப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன


Similar posts

Comments are closed.