பெண்களுக்கான உலக கிண்ண டுவென்டி-20 போட்டிகள் இன்று தொடக்கம்

Written by vinni   // March 23, 2014   //

Anya-Shrubsole_2476136bவங்கதேசத்தில் இன்று முதல் பெண்களுக்கான டுவென்டி-20 உலக கிண்ண போட்டிகள் தொடங்குகிறது.

பெண்கள் உலக கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகளும்,

பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்காளதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

சைலெட் மைதானத்தில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டங்களில் அவுஸ்திரேலியா– நியூசிலாந்து(மாலை 3 மணி), பாகிஸ்தான்– தென் ஆப்ரிக்கா(இரவு 7 மணி) மோதுகின்றன


Similar posts

Comments are closed.