இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்

Written by vinni   // March 23, 2014   //

pakistan_india_t20_00320 ஓவர் உலக கிண்ண போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம் இடம் பெற்ற பிரிவில் உள்ளது.

முதல் போட்டியில் பாகிஸ்தானை வெற்றி கொண்ட இந்திய அணி இன்று மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்திய நம்பிக்கையில் இருக்கும் இந்திய அணி, இரண்டாவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய துறையில் இந்திய அணி சமபலத்துடன் காணப்படுகிறது.

நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சவால் விடக்கூடியது. அந்த அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர்.

அதேவேளை, இதே பிரிவிலுள்ள பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியி்ல் அவுதிரேலியாவை எதிர்கொள்கிறது.


Similar posts

Comments are closed.