இங்கிலாந்தின் வெற்றி மழையால் பறிபோனது !

Written by vinni   // March 23, 2014   //

england_newzealand_15_001உலக கிண்ண இருபதுக்கு- 20 தொடரின் நேற்றைய போட்டியொன்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை குவித்தது. மொயின் அலி 36 ஓட்டங்களையும், மைக்கேல் லம்ப் 33 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 32 ஓட்டங்களையும், ரவி போபரா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 52 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது கனே வில்லியம்சன் 24 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லம் 16 ஓட்டங்களுடனும்  களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை மேற்கொண்டு தொடர முடியவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணி குறைந்தது 5 ஓவர்கள் விளையாடி விட்டாலே டக்வொர்த் லீவிஸ் விதிப்படி முடிவு அறியப்படும்.

இதன்படி 5.2 ஓவர்களில் நியூசிலாந்துக்கு 44 ஓட்டங்களே போதுமானதாக இருந்ததால், அந்த அணி 9 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.