இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு பிரித்தானியா கோரிக்கை

Written by vinni   // March 23, 2014   //

William-Hague_CIஇலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் சியாராலியோனுக்கு எதிராக ஐ.நா சபையின் உதவியுடன் அமைக்கப்பட்ட விசேட சர்வதேச நீதிமன்ற விசாரணையை போன்று  விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்று இந்தத் தகவலை  வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு எதிரான பிரசாரம் வேறு பாதையில் திருப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த முனைப்பை பிரித்தானியா புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தங்களின் அடிப்படையிலும் அமெரிக்காவின் ஜெனீவா யோசனைக்கு இந்தியா ஆதரவளிப்பதாக அறிவித்தமையையும் அடுத்தே  இந்த புதிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி அமெரிக்கா ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள யோசனைக்கான வாக்கெடுப்பு  இடம்பெறவுள்ளது.

சியாராலியொனில் ஜனாதிபதி சார்ல்ஸ் டெய்லருக்கு எதிராக அமைக்கப்பட்டமையை போன்று விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டால் அதன் மூலம் இலங்கையின் காயங்களுக்கு தீர்வு கிட்டும் என்று வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்து ஹேக்கில் நடைபெற்ற சியாரோலியோன் விசேட நீதிமன்றத்தின் மூலம் மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தப்பட்ட சார்ல்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


Similar posts

Comments are closed.