சர்வதேசத்தினை ஏமாற்ற விடுதலைப் புலிகள் என்ற கதையை மீண்டும் உருவாக்கி உள்ளார்கள் – பா.அரியநேத்திரன்

Written by vinni   // March 23, 2014   //

ariyanenthiran_41958ம் ஆண்டு தந்தை செல்வா இதே போன்ற ஒரு போராட்டத்தினைத்தான் காலி முகத்திடலில் நடத்தியிருந்தார். இன்று 56 வருடங்களுக்குப் பிற்பாடு மன்னாரிலும் அவ்வாறானதொரு போராட்டத்தினை நடத்திக் கொண்டு இருக்கின்றோம். என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

மன்னார் மாவட்ட அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சத்தியாக்கிரக போராட்டம் அண்மையில் மன்னார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட ஆண்டகை இராயப்பு யோசப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள், வடமாகாணசபை அமச்சர்கள் காணமல்போனோர் சங்கத்தின் உறுப்பினர்கள் மேல்மாகாண சபையின் வேட்பாளர்கள் மற்றும் புத்திஜீவிகள். கல்வி மான்கள், அருட்சகோதரர்கள். அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

எமது போராட்டங்கள் அகிம்சை, ஆயுதப் போராட்டங்கள் என்று பல பரிமாணங்களைக் கொண்டவை அதனடிப்படையிலேதான் எமது போராட்டங்கள் தந்தை செல்வா தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் வரை சென்ற பின்னர்தான் தற்போது த.தே.கூட்டமைப்பும், புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களும் இணைந்தே சர்வதேச ரீதியான போராட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக 2009க்கு பிற்பட்ட காலப்பகுதியிலும் அதற்கு முந்திய காலத்தில் இருந்தும் எங்களை எவ்வாறு நடத்தி வந்திருக்கின்றது என்பதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியமாகும்.

தந்தை செல்வா ஆரம்பித்த அகிம்சைப் போராட்டமும் இப்போது இருக்கின்ற த.தே.கூட்;டமைப்பு செய்கின்ற இந்த அகிம்சைப் போராட்டத்திலும் என்ன வித்தியாசத்தினை கண்டிருக்கின்றோம்.

அன்றிருந்த அடக்குமுறைக்கும் இன்றிருக்கின்ற அடக்கு முறைக்கும், அன்று இடம்பெற்ற இனப்படுகொiலைக்கும். இன்று இடம்பெற்றிருக்கின்ற இனப்படுகொலைக்கும் என்ன மாற்றங்கள் என ஆராய வேண்டும்.

இனப்படுகொலை என்பதனைக்கூட தவிர்க்க வேண்டும் என்ற யதார்த்தம் இங்கு இருக்கின்றது. ஆகவே இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பேசாமல் தமிழினப் படுகொலை என்ற வார்த்தையைப் பேசிகின்றேன்.

இந்த தமிழினப் படுகொலை என்பது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரைக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

2009ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையிலே இருந்து விடுதலைப் புலிகள் இல்லையென்று கூறிய இந்த அரசாங்கம் இன்று விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்கள்.

வடகிழக்கிலே புலிகள் இருக்கின்றார்கள் என்று காட்டவேண்டிய தேவை தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு எழுந்துள்ளது.

காரணம் ஜெனிவா மாநாட்டின் ஒரு அங்கமாக இது பேசப்படுவதனால், கிளிநொச்சியிலே இடம்பெறுகின்ற மனித உரிமை மீறள்களுக்கு எதிராக குரல்கொடுத்த ஒருவர் என்ற ரீதியில்தான் அவருடைய கடத்தல் நாடகம் அரங்கேறி இருக்கின்றது.

இவர் பல போராட்டங்களில் பங்கெடுத்த தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காகத்தான் விடுதலைப் புலிகள் என்ற கதையை உருவாக்கி சர்வதேசத்தினை ஏமாற்ற நினைக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

அனைவரும் ஒருமித்து நிச்சயமாக இந்த நாட்டிற்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று மிக முக்கியமாகத் தேவை என்று கூறிக்கொண்டு இருக்கும் போது தான் இவ்வாறான புலி நாடகத்தினை வடக்கு மாகாணத்திலே நிறைவேற்ற முற்படுகின்றார்கள்.

இதனைக்காட்டி தற்போது இருக்கும் படைவலுச் சமநிலையை அதிகரிக்கச் செய்வதோடு இராணுவ மயமாக்கலையும் ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டி இருக்கின்றது எனவும் கூறினார்.


Similar posts

Comments are closed.