எது நிஜம்? எது நடிப்பு? : போலி வலி பேர்வழிகளை காட்டிக் கொடுக்கும் நவீன கம்ப்யூட்டர்

Written by vinni   // March 23, 2014   //

neck pain imageதலை வலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் எதிர்பாராத வேளைகளில் ஏற்படும்போது உயிரே போய் விடுவது போல் பலர் துடித்துப் போய் விடுவதுண்டு. ஆனால், இவற்றையே சாக்காக வைத்து, வலி ஏற்பட்டதைப் போல் போலியாக ஆஸ்கார் நாயகர்கள் அளவிற்கு சிலர் நடித்து அசத்துவதுண்டு.

இதில் இரண்டாவது பிரிவினரை இனம்காண முடியாமல் எது நிஜம்? எது நடிப்பு? என்பது புரியாமல் பலர் மண்டையை பிய்த்துக் கொள்வதும் உண்டு.

ஆனால், இனி இந்த ஆஸ்கார் பேர்வழிகளின் நடிப்பு எடுபடாமல் போகும் அளவுக்கு இவர் நிஜ வலியால் துடிக்கிறாரா?, போலி வலியால் நடிக்கிறாரா? என்பதை வெகு துல்லியமாக கண்டுபிடித்து விடும் நவீன கம்ப்யூட்டரை அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள சாண்டியாகோ நரம்பியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்காக வலியால் அவதிப்படும் 25 பேரின் ஒரு ஜோடி வீடியோ காட்சிகளை ஆராய்ச்சியாளர்கள் 170 பேரிடம் போட்டுக் காண்பித்தனர். இவற்றில் எது நிஜ வலி?; எது போலி வலி? என்று அடையாளப்படுத்தும்படி, அவர்களிடம் கூறிய போது சுமார் 50 சதவீத நடிப்பை மட்டுமே இவர்களால் இனம்காண முடிந்தது.

ஆனால், இதே காட்சிகளை கவனித்த இந்த நவீன கம்ப்யூட்டரோ… 85 சதவீதம் துல்லியமான முடிவை வெளியிட்டு மனிதர்களை அசத்தியுள்ளது. நிஜ வலி ஏற்படும் போது மனிதர்களின் வாய் உள்ளிட்ட முகத்தின் தசைப் பகுதிகளில் உண்டாகும் 20 வகை மாற்றங்களை அடிப்படையாக வைத்து இந்த சரியான முடிவுகளை கம்ப்யூட்டர் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.