ஜெனிவா மனித உரிமை பேரவையில் அனந்தி சசிதரன் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு கடிதம்

Written by vinni   // March 23, 2014   //

download (1)வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலமாக வடக்கில் நிலவும் உண்மையான நிலைமைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கி கூற வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியற்துறையின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான எழிலனின் மனைவி அனந்தி சசிதரன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையின் நோக்கம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு கடிதம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சிறுவர்களை சேர்க்கும் பணிகளில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனந்தி சசிதரன், மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், வடக்கில் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் தவறான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சரின் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் தேவானந்தாவின் இந்த கடிதம் அமைச்சரவையில் உள்ள ஏனைய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தி அனந்தி சசிதரன் ஜெனிவாவில் உரையாற்றியதாகவும் அரசாங்கத்தின் நன்மதிப்பை கெடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், அவர் உரையாற்றியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் உடனடியாக இலங்கையின் உண்மை நிலைமைகள் குறித்து தெளிவுப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸூக்கு அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.