இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை தாய்லாந்தில்

Written by vinni   // March 23, 2014   //

santhirikaஇலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெற்றுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இலங்கையில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரங்களில் தெரிவுசெய்யப்பட்ட தூதரங்களின் அரசியல் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி சம்பந்தமாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட போகும் பொது வேட்பாளர் யார் என்பதே இந்த பேச்சுவார்த்தையில் பிரதான கருப் பொருளாக இருந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மாதுளுவாவே சோபித தேரர் ஆகிய இருவரில் மிகவும் பொருத்தமானவர் யார், இலங்கையில் செயற்படும் மாற்று சக்திகள், பிரதான அரசியல் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தும் திறமை யாருக்கு இருக்கின்றது என்பன குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை பொது வேட்பாளராக நிறுத்த இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. அவரது ஆட்சிக்காலத்திலும் ஜனநாயகம் செயற்படுத்தப்படவில்லை என இந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அவரது ஆட்சிக்காலத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் செயலிழக்க செய்யப்பட்டமையை இந்த நிறுவனங்கள் உதாணரமாக சுட்டிக்காட்டியுள்ளன.

தாய்லாந்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்ட மற்றும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாட இந்த தரப்பினர் தீரமானித்துள்ளதாக தெரியவருகிறது.


Similar posts

Comments are closed.