மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடலில் தேடும் 2 சீன போர் விமானங்கள்

Written by vinni   // March 23, 2014   //

5f164f0174c808952ac5906537a75443இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கருதப்படும் மலேசிய விமானத்தை 2 சீன போர் விமானங்கள் தேடுகின்றன.

239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம் நடுவானில் பறந்த போது திடீரென மாயமானது.

அந்த விமானம் மாயமாகி 3 வாரமாகி விட்டது. அது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் விமானம் பற்றி எந்த விதமான தகவலும் இல்லை. கடல் பகுதியிலும், தரை பகுதியிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. இருந்தும் அதன் உடைந்த பாகங்கள் கிடைக்கவில்லை.

இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விமானத்தின் உடைந்த 2 பாகங்கள் போன்ற பொருட்கள் மிதப்பதை ஆஸ்திரேலிய செயற்கை கோள் படம்பிடித்தது. எனவே, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 6 விமானங்கள் மற்றும் 2 சரக்கு கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, இந்த பொருட்கள் கிடந்த பகுதியில் மேலும் 2 பொருட்கள் மிதப்பதை சீன செயற்கை கோள் படம் பிடித்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய செயற்கை கோள் படம் பிடித்த இடத்தில் இருந்து 120 கிலோ மீட்டருக்கு தெற்கே அவை கிடக்கின்றன.

மாயமான விமானத்தில் பயணம் செய்தவர்களில் 158 பேர் சீனர்கள். எனவே தேடுதல் விவகாரத்தில் சீனா மும்முரமாக உள்ளது. இந்த நிலையில் செயற்கை கோள் படத்தின் மூலம் 2 பொருட்கள் மிதப்பது கண்டறியப்பட்டதால் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது.

எனவே, தேடுதல் வேட்டையில் ஈடுபட தனது 2 போர் விமானங்களை ஆஸ்திரேலியாவுக்கு சீனா அனுப்பியுள்ளது. அவை பெர்த் கடற்படை தளத்துக்கு சென்றடைந்து விட்டன. இன்று தேடுதல் வேட்டை நடத்தும் பணியை தொடங்கி விட்டன. ஏற்கனவே சீனாவின் 6 விமானங்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றன


Similar posts

Comments are closed.