கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம் – ஆபிரிக்க நாடுகள்

Written by vinni   // March 23, 2014   //

550px-Africa_(orthographic_projection).svgஇலங்கை மீது சர்வதேசம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புகளை தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது என சில ஆபிரிக்க நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 25 வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் விசேட பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அந்நாடுகளின் பிரதிநிதிகள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் ஒத்துழைப்புகளை கட்டியெழுப்பாமல், பல்வேறு அணிகளாக இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள முடியாது.

அவ்வாறான செயற்பாட்டுக்கான உடனடியாக நடவடிக்கைகளை எடுக்காது போனால், இலங்கை கெடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம் என ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.