த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் இணைய வேண்டும் என்பதே முஸ்லிம்களின் விரும்பம்: ஹசன் அலி

Written by vinni   // March 22, 2014   //

TNA-and-SLMC-logoநீண்டகாலமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்துள்ள போதும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் அரசாங்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை இன்னும் தீர்க்கவில்லை.

இந்த நிலையில் இதற்கான மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டி இருப்பதாகவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.