தீவொன்றை விலைக்கு வாங்கிய ஜனாதிபதி மஹிந்த!

Written by vinni   // March 22, 2014   //

art.mahinda.rajapaksa.afp_.gi_ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீஷெல்ஸ் நாட்டின் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீஷெல்ஸ் நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத 100க்கும் மேற்பட்ட தீவுகள் இருப்பதாகவும் அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு நிறுவனங்களுக்கும் வழங்க அந்நாடு தீர்மானித்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றை ஜனாதிபதி கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த தீவு கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவுகள், ஆப்பிரிக்க கண்டத்திற்குரிய நாடாகும்.

செல்வந்த நாடாக சீஷெல்ஸ் தீவுகளில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இலங்கை சேர்ந்த பலர் அங்கு தொழில் புரிந்து வருகின்றனர்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் சுருட்டப்பட்ட பெருந்தொகை பணத்தை ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதன் நிலை அதிகாரிகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக சீஷெல்ஸ் நாட்டின் ஜனாதிபதி கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீஷெல்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த பயணத்தின் போது பிரசாலின் என்ற தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, உலகில் மிகவும் அரிய வகை பறவை இனமான கறுப்பு கிளிகளை எடுத்து வந்து, அலரி மாளிகையில் வளர்த்து வந்தார்.

அவற்றில் ஒன்று அண்மையில் பறந்து சென்று விட்டதால், அதனை தேடிக் கண்டுப்பிடிக்க பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன எனவும் அந்த சிங்கள இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

1700 ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பியர் சீஷெல்ஸ் தீவுகளை கைப்பற்றும் வரை அந்த தீவு அரேபிய மற்றும் ஆசியா இடையில் பயணிக்கும் கப்பல்களை கொள்ளையிடும் கொள்ளையர்களின் வசஸ்தலமாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.