காணாமல் போன மலேசிய விமானத்தை தேட 2.5 மில்லியன் டொலர் செலவு

Written by vinni   // March 22, 2014   //

Malaysian-planeகடந்த 7ம் திகதி நள்ளிரவு காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலகநாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் இதுவரை காணாமல் போன விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமை அலுவலகம் பெண்டகன் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், அமெரிக்கா சார்பில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் விமானங்களும் இந்தியா மற்றும் சீனக்கடற்பகுதிகளில் தேடுவதற்கு கப்பல்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுவரை விமானத்தை தேடும் பணிக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

தேடுல் பணிக்காக 4 மில்லியன் அமெரிக்க டொலர் வரை பட்ஜெட் போட்டிருப்பதாக பெண்டகன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.