தேர்தலில் நான் போட்டியிடவில்லை – ஷேவாக்

Written by vinni   // March 21, 2014   //

02-shewag-300இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷேவாக்கை கிரிக்கெட் வாரியம் ஓரம் கட்டி விட்டது. அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் புறக்கணித்து வருகிறார்கள். ஆனாலும், ஷேவாக் தன்னால் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாட முடியும் என்றும், இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் ஷேவாக், காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆனால், இதை ஷேவாக் மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஏன் இந்த மாதிரி கதைகளை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறி உள்ளார்.

இதை செய்தியை அறிந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெலின் பீட்டர்சன், ஷேவாக் நீங்கள் போட்டியிடுங்கள். நான் உங்களுக்கு ஓட்டு போடுகிறேன் என்று கிண்டலடித்துள்ளார்.


Similar posts

Comments are closed.